• Dec 25 2024

பாக்கியாவுக்கு கதிரையால் அடிக்க ஓங்கிய கஸ்டமர்! இழுத்து மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது. எனினும் இந்த சீரியலில் நடித்து வந்த ராமமூர்த்தியின் கேரக்டர் இல்லாமல் போனதும் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் அடி வாங்கி வருகின்றது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கிச்சனில் வேலை செய்யும் செப் ஒருவரை பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு அனுப்பி பாக்யாவின் குடும்பத்தையும் அவருடைய கனவையும் சுக்கு நூறாக உடைப்பதற்கு கோபி திட்டம் போட்டு உள்ளார். அதன்படியே அவர் அனுப்பி வைத்த நபரும் செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.


அதில் ஏராளமான பிரியாணி ஆர்டர்களை எடுத்த செஃப் வேணும் என்று பாக்கியாவின் பெயரை கெடுப்பதற்கு திட்டம் போடுகின்றார். அதன்படியே ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் பிரியாணி ஆர்டர்கள் பெற்ற வாடிக்கையாளர்கள் அதை சாப்பிட்டு வாந்தி, வயிற்று ஓட்டம் என்று உடல் உபாதைகள் ஏற்பட்ட ஈஸ்வரி  ரெஸ்டாரண்டை முற்றுகையிட்டார்கள்.

அதிலும் ஒருவர் தனது மகள்  ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருப்பதாக பாக்கியாவுக்கு கதிரையால் ஓங்கி அடிக்க செல்கின்றார். ஆனால் செழியன் அவரை தடுத்து நிறுத்தி விடுகின்றார். மேலும் அங்கு வந்த சுகாதார பணியாளர்கள் கிச்சனில் உள்ள உணவுகளை செக் பண்ணி பார்த்தபோது அதில் இறைச்சி பழுதானது என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணத்தினால் ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து விடுகின்றார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்து கோபி மிகவும் சந்தோஷப்படுகின்றார். அத்துடன் எல்லாத்தையும் அனுபவி என்று பாக்யாவுக்கு திட்டுகின்றார். எனவே இதிலிருந்து பாக்கியா எப்படி மீள போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement