• Dec 26 2024

தலைவர் படத்துக்கு நோ சொன்ன பிரபல நடிகர்... கிடைத்த நல்ல வாய்ப்பை மிஸ் செய்துட்டாரே...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் மாறும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் தான் தலைவர் 171. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என கூறியுள்ளார் நடிகர்.


சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும்  தலைவரின் 171 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.


சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி தலைவரின் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க போகிறார் என தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது கூறப்படுவது என்னவென்றால் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்துள்ளார். ஆனால், தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


எனதற்காக அவர் அப்படி செய்தார், கிடைத்த நல்ல வாய்ப்பை  ஏன் வேண்டாம் என்றார் என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன இதற்கு சம்பளம் காரணமா அல்லது இனி மேல் எந்த படத்திலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி எடுத்துள்ள முடிவு தான் காரணமா என தெரியவில்லை  என் சினிமா வட்டாரங்கள் பரவலாக பேசிவருகின்றனர். 

Advertisement

Advertisement