• Dec 27 2024

திருட்டு பையனுக்கு சப்போர்ட் பண்ணிய பிரபல நடிகர்! யாரும் நினைத்து பார்க்காத ட்விட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக  திகழ்பவர் தான் சோனு சூட். இவர் தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட திரையுலகிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களை தான் அதிகம் தேர்ந்தெடுப்பார். ஆனாலும் இவர் உண்மையிலே மனிதாபிமானத்திற்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக காணப்படுகிறார்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வசதி மற்றும் பல உதவிகளை செய்து இருந்தார். அதற்குப் பிறகு அவர் செய்யும் உதவிகளை பார்த்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அவர் வீட்டு வாசலில் குவிந்து காணப்பட்டார்கள்.


இந்த நிலையில், கஸ்டமர் ஒருவரின் வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்ட ஷூக்களை திருடிய நபர் ஒருவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் சோனு சூட். இவ்வாறு இவர் திருடனுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அதாவது அண்மையில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கஸ்டமர் வீட்டுக்குச் சென்று உணவை டெலிவரி கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வெளியே இருந்த ஷூக்களை திருடி சென்றுள்ளார். அந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலானது.


இதனை பார்த்த நடிகர் சோனு சூட், தனது ஆதரவை குறித்த டெலிவரி பாய்க்கு தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், டெலிவரி செய்யும் நபர் உணவை வழங்கிய பிறகு ஷூக்களை திருடி சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அது அவருக்கு தேவைப்பட்டதாக இருக்கலாம். அன்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் ட்விட் செய்துள்ள நிலையில், பலர் அவரை பாராட்டினாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை முன் வைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement