• Dec 26 2024

உதவி கோரி வீடியோ வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் .இவருக்கு இந்த நிலையா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் நாயகி தவிர்த்தும் கதையோட்டத்தின் தொடர்ச்சிக்கு பெரிதும் உதவுவது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபத்திரங்கள் தான்.ஆனாலும் இன்றுவரை குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களுக்கான அங்கீகாரம் சரிவர கிடைத்தபாடில்லை.

Tollywood Movie Actor Vengal Rao Biography | பிரபல காமெடி நடிகர் வெங்கல்  ராவ் மருத்துவமனையில் அனுமதி

ஆரம்ப காலங்களில் பைட்டர் டூப் ஆட்டிஸ்டாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வெங்கல்ராவ்.அன்றைய காலத்தில் ரஜனிக்கும் டூப் போட்ட வெங்கல்ராவ் எதிர்பார விதமாக நகைச்சுவை காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார்.பெரிதும் வடிவேலுவுடன் நகைச்சுச்சுவை காட்சிகளில் தோன்றிய வெங்கல்ராவ் கடைசியாக வடிவேலுவின் எலி படத்தில் வடிவேலுவின் கையாளாக நடித்திருப்பார்.

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ - YouTube

திரையில் வந்து நம் அனைவரையும் சிரிக்க வைக்க இவர் தற்போது வெளியிட்டிருக்கும் காணொளி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.ஒரு கை கால் செயலிழந்து உடல் நாலைகுறைவுவுடன் இருக்கும் நடிகர் வெங்கல்ராவ் சினிமா துறையினரிடம் தனது சிகிட்ச்சைக்கான பணவுதவியை கோரி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement