• Dec 27 2024

மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபல தயாரிப்பாளர்! குடும்பத்தாரின் அதிர்ச்சி வாக்குமூலம்..

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக காணப்பட்ட சௌந்தர்ய ஜெகதீஷ் விபரீத முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொழிலதிபராக காணப்பட்ட சௌந்தர்ய ஜெகதீஷ் கன்னடத்தில் பப்பு, மஸ்த் மஜா மதி, சிநேகிதரு மற்றும் ராம்லீலா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். 

சௌந்தர்ய ஜெகதீஷை பொறுத்தவரை அவருக்கு பொருளாதார பிரச்சனையோ, உடல் நலம் தொடர்பான பிரச்சனையோ எதுவும் இருந்ததில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் ஒருவரும் உள்ளார். சமீபத்தில் தான் அவரது மகளுக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் அவர் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அதாவது பெங்களூரில் உள்ள அவருக்கு சொந்தமான ரெஸ்டோபார் நிறுவனம் வழக்கு ஒன்றில்  சிக்கி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவ்வாறான நிலையில், அவர் சமீப காலமாகவே மனம் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார் என்றும், அதற்காக அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த 55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ், நேற்று அதிகாலை 4 மணி அளவில் தன் அறையிலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாருக்கும் தெரியாத நிலையில், காலை 9:40க்கு பின்பே இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின்பு அவரை மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. இவரது மரணம் தற்போது வரை மர்மமாக  காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement