• Dec 26 2024

நடிகை ஷாலினிக்கு சப்ரைஸ் கொடுத்த ரசிகன்... அதற்க்கு ஷாலினி என்ன செய்தார் தெரியுமா... வைரல் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் குழந்தை நட்சத்திரனமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. கிட்டதட்ட 8 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதன்பின் சில ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமான ஷாலினி, விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.


அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் என சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இதுவரை எந்த ஒரு படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை.


இந்நிலையில் நடிகை ஷாலினியை நேரில் சந்தித்த ரசிகர்கள் ஒருவர், தன் கையால் வரைந்த ஷாலினியின் ஓவியத்தை ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதன்பின், ரசிகர்களின் செல்போன் பேக் கேசில் Keep Smiling Love Shalini' என எழுதி கொடுத்துள்ளார் ஷாலினி. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement