• Dec 26 2024

மலேசியாவில் இருந்து விஜயாவுக்கு வந்த கிஃப்ட்... பாயிண்ட்டை பிடித்த முத்து! மீண்டும் சிக்கிய ரோகிணி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், புதுக் காரில் முத்துவும் மீனாவும் செல்ல, மீனா பேச்சுக் கொடுத்து கொண்டே செல்கிறார். ஆனால் முத்து சந்தோஷத்தில் ஒன்றுமே பேசாமல் செல்கிறார். உனக்கு எப்படி இந்த ஐடியா வந்தது என கேட்க, நீங்க எனக்கு பூக்கடை வச்சு கொடுத்தது போல தான் என சொல்கிறார். மேலும் மீனாவுக்கு தலை நிறைய பூ வச்சு அழகு பார்க்கிறார் முத்து. 

அதன்பின் கார் செட்க்கு சென்று அங்கு எல்லாரிடமும் சொல்ல, அவர்கள் ஏற்கனவே தெரியும் என சொல்லி சிரிக்கிறார்கள். அதன்பின் காருக்கு பின்னால் முத்து, மீனா என்பவற்றின் முதல் எழுத்து M என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்.

மறுபக்கம், வீட்டில் அண்ணாமலை, மனோஜிடம் நீ என்ன செய்ய போறா? வேளைக்கு போற ஐடியா இல்லையா? முத்துவ பாரு எதாவது செய்துட்டு தான் இருக்கான் என பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்க, அங்கு வந்த ரோகினி, மலேசியாவில் இருந்து மாமா சாரி அனுப்பியதாக விஜயாவுக்கு கொடுக்கிறார். அதை பார்த்தது விஜயா சமாதானம் ஆகி, உனக்கு டீ போட்டு தரேன்மா என செல்கிறார்.


அதன்பின், அங்கு வந்த முத்து எல்லாரையும் அழைத்து காரை காட்டி சந்தோசப்படுகிறார். இந்த கார் எவ்வளவு போகுமென்று விஜயா கேட்க, 10 லட்சம் என முத்து சொல்கிறார். ஆனாலும் மனோஜ் இது செகனண்ட் கார் சும்மா ஒரு லட்சம், இரண்டு லட்சம் தான் போகும் என்ன கிண்டலாக சொல்கிறார்.

அதற்கு முத்து என் பொண்டாட்டி பூக்கட்டி ஒரு லட்சம் என்றாலும்  வாங்கி கொடுத்திருக்கா, இதுவே என் பொண்டாட்டி மலேசியால இருந்தா 10 லட்சம் என்ன 10 கோடிக்கு வாங்கி கொடுத்திருப்பா  என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

அதற்குப் பிறகு ரூமுக்குள் வந்த ரோகினி இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்குதோ என விஜயாவிடம் சொல்ல, முத்துவை மீனா தூக்கி விட்டுட்டா, ஆனா மனோஜ்ஜ தூக்கி விட யார் இருக்கா என புலம்புகிறார். 

ஆனாலும் ரோகிணி ஒன்றும் பேசாமல் இருக்க, இப்ப கூட நீ ஒன்றும் சொல்ல இல்லை, நீ நினைச்சிருந்தா அவன் இன்னைக்கு நல்லா வந்திருப்பான் பெரிய ஓனராகி இருப்பான் என விஜயா சொல்கிறார் . இதைக் கேட்டு என்ன சொல்வது என தெரியாமல் ரோகிணி திகைத்து நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement