• Dec 26 2024

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையா இவர்? நெளிவு சுளிவுடன் ஒரு போட்டோஷூட்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பானபாண்டியன் ஸ்டோர்ஸ்என்ற சீரியல் முதல் சீசனில் முல்லை என்ற கேரக்டரில் நடித்த நடிகை காவியா அறிவுமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் காஸ்ட்யூமில் நெளிவு சுளிவுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



 விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுபாண்டியன் ஸ்டோர்ஸ்என்பதும் இந்த சீரியலின் முதல் சீசனில் முல்லை என்ற கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்தது. முல்லை கேரக்டரில் முதலில் விஜே சித்ரா நடித்த நிலையில் அவர் திடீரென அகால மரணம் அடைந்ததை அடுத்து இந்த கேரக்டரில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார் என்பதும் கதிர் கேரக்டருக்கு ஜோடியாக அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 இந்த நிலையில் காவ்யா அறிவுமணி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்சீரியலில் இருந்து திடீரென விலகியதால் அவருக்கு பதில் வேறொரு நடிகை நடிக்க  தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பானபாரதி கண்ணம்மாஎன்ற சீரியலிலும் அவர் காவ்யா என்ற கேரக்டரில் நடித்திருந்ததால் தான் அவருக்கு காவ்யா அறிவுமணி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி பரத் நடித்தமிரர்உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.


 இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா அறிவுமணிக்கு ஒரு மில்லியனுக்கு மேலான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கிளாமர் காஸ்ட்யூமில் அவர் நெளிவு சுளிவுடன் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement