• Dec 26 2024

ஒரு கோடி மதிப்புள்ள வீடு... ஆனால் எல்லாம் லோன்னு... ஆலியா மானசா சம்பளம் விபரம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானார். இவர் அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு விஜய் டிவியில் இருந்து விலகி இருந்தார்.


தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இது பற்றி ஆல்யா மானசா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.


அதில், ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் எனவும், அதனால் இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம் எனவும், இந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க லோனில் கட்டியுள்ளதாகவும் மானசா கூறிருந்தார். தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளம் வாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement