• Dec 25 2024

புஷ்பாவுக்கு ஒரு நியாயம்.. கங்குவாவுக்கு ஒரு நியாயமா? பின்னணியில் வெளியான கசப்பான உண்மைகள்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் திரைப்படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. ஆனால் பாலிவுட் திரையுலகில் வெளியாகும் திரைப்படங்கள் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றன.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. ஆனால் புஷ்பா 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பின்வாங்கி இருந்தாலும் வசூலில் 1500 கோடி வரை சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், புஷ்பா படத்திற்கு ஒரு நியாயம்? கங்குவா  படத்திற்கு ஒரு நியாயமா? தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாட மறுப்பது ஏன் என்று சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

d_i_a

அதன்படி கங்குவா படத்திற்கும் புஷ்பா 2 படத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது. இரண்டுமே ஒரே மாதிரியான மேக்கிங்.. கங்குவா படத்தைப் பார்க்கும்போது ஒரு ஹாலிவுட் ஃபீல் கொடுத்துச்சு தானே.. அந்தப் படத்தை எதற்காக பாராட்டவில்லை.


இன்னொரு பக்கம் புஷ்பா 2 படத்தின் மொத்த நீளம கிட்டத்தட்ட மூன்று அரை மணி நேரம் காணப்படுகின்றது. இந்த படத்தை பொறுமையாக பார்த்த ரசிகர்கள், கங்குவா படத்தின் முதல் அரை மணி நேரம் கிரிஞ்சாக காணப்படுவதாக குற்றம் சாட்டினார்கள். இதற்கான காரணம் என்ன?

இதுக்கு ஒரே விஷயம் தான் காரணம். கங்குவா படம் ப்ளாப்பான போதும் அந்த படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தது. இதனைத் தாண்டியும் நிறைய விஷயங்கள் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. ஆனால் நிறைய பேர் பாராட்டாம விட்டுட்டாங்க..


அது கங்குவா படத்திற்கு மட்டும் அல்ல, சமீபத்தில் வெளியான  வலிமையா இருக்கட்டும், லியோ, வேட்டையன், இந்தியன் 2 என  இந்த படங்களுக்கு ஏனைய ஸ்டேட்ல இருந்து வந்த நெகட்டிவ் தாண்டிதமிழ் நாட்டுல நிறைய நெகட்டிவ் இருந்துச்சு அப்படின்னு சொல்லப்படுது.

குறிப்பா நம்ம பாலிவுட்டில் வெளியாகும் படங்களை செலிப்ரேட் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். அதுல தெலுங்குல என்ன படம் வருது, கன்னடத்துல என்ன படம் வருதுனு அந்த பெரிய படங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். இதனால தமிழில் வெளியாகும் படங்களை கொண்டாட மறுக்கிறோம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement