தனுஷ் இயக்கி நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து பவிஷ், அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் , மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார், மேலும் சமீபத்தில் தனுஷ் பாடிய காதல் தோல்வி பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில், வொண்டர்பார் பிலிம்ஸ் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலானா "யேடி" லிரிக்கல் பாடலினை வெளியிட்டுள்ளது. அந்த பாடல் "ஏதேதோ பேச்சு நாள் தோறும் ஆச்சு" என ஆரம்பமாகி, இசை மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, இதில் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.வீடியோ இதோ ..
Listen News!