தமிழ் சினிமாவில் தொடர்ந்தும் புதுமையான கதைகள் உருவாகி வருகின்றன. அந்தவகையில் , ‘கிங்ஸ்டன்’ என்ற புதிய படம் உருவாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் இந்தப் படம் குறித்து கதைத்த நேர்காணல் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் கடல் மற்றும் அதன் மர்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டது என்றார். மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை கடலை மையமாகக் கொண்டு எந்த திரைப்படமும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் "கடலுக்கு அடியில் இருக்கும் மர்மங்களை கதையாக்கி, அந்த இடத்தின் அழகையும் அபாயங்களையும் உணர்த்தும் விதமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக இருக்கும்," என அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட சில முக்கியக் காட்சிகள், முன்னணி ஹாலிவுட் திரைப்படங்களை நினைவூட்டும் அளவிற்கு காணப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் கடலுக்கு அடியில் படப்பிடிப்பு மேற்கொள்வது ஒரு பெரிய சவால் என்பதால் தொழில்நுட்பத்தில் அதிகளவு கவனம் செலுத்தி இப்படத்தினை படக்குழு உருவாக்கியுள்ளனர் என்றார்.
படத்தின் இயக்குநர், தமிழ் சினிமாவில் முன்னணி கதைகளை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் ‘கிங்ஸ்டன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உள்ளார் எனவும் தெரிவித்தார். இத்திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் புதுமையான முயற்சியாக கருதுகின்றனர்.
Listen News!