• Sep 17 2026

கோட் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா! வைரலாகும் புகைப்படம்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த வாரம் செப்டம்பர் 5 -ல் வெளிவர உள்ள படம் கோட். இந்த படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர்.


சமீபத்தில்,இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து நல்ல ரீச் அடைந்த நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் சந்தித்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கோட் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறாரா என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.


அந்த படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், மோகன்லால் நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வெங்கட் பிரபுவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும். 




Advertisement

Advertisement