• Dec 26 2024

நாடு திரும்பிய இசைக்குயில் அசானி... சொந்த ஊர் மக்கள் வழங்கிய அமோக வரவேற்பு... இணையத்தினை கலக்கும் புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை சிறுமி அசானி தற்போது  நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரின் ஊரில் அவருக்கான அமோகமான வரவேற்புகள் நடைபெற்றது. அந்த தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ


சரிகமப கிராண்ட் ஃபினால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டாக நடைபெற்றது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இதில், தன் வசீகர குரலால் அனைவரையும் ஈர்த்து வந்த இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்று டைட்டிலை வென்றார்.


அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், மலையக மக்களின் அடையாளமாக நின்ற அசானி இன்று நாடு திரும்பியுள்ளார். அசானி சரிகமப வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை நிரூபித்து வந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டிருந்தார்.


இருப்பினும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய அளவில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்லுமுன் கம்பளையில் ஆலய வழிபாட்டில் அசானியின் குடும்பத்தினர் ஈடுபட்டர். பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.


Advertisement

Advertisement