கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இதன் காரணமாக கடந்த வாரம் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற இவர் தற்போது சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது மனைவியுடன் ஒரு பதிவொன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் அவரது மனைவியுடன் சேர்ந்து உரையாடியுள்ளார் இதன் போது சிவராஜின் மனைவி "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.டாக்டர் சிவ ராஜ்குமாரின் அனைத்து அறிக்கைகளும் எதிர்மறையாக வந்துள்ளன. நோயியல் அறிக்கை கூட எதிர்மறையாக வந்துள்ளது, இப்போது அவர் அதிகாரப்பூர்வமாக புற்றுநோயிலிருந்து விடுபட்டுள்ளார், ரசிகர்களின் பிரார்த்தனைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிவராஜ் "அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. மார்ச் மாதத்திற்கு பின் வழக்கம் போல செயல்படலாம் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நான் திரும்பி வருவேன், அப்போது சிவாண்ணா எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். உங்கள் அன்பும், நம்பிக்கையும் ஒருபோதும் மறக்கப்படாது.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
இவ் வீடியோவிற்கு சிவராஜ் ரசிகர்கள் மிகவும் மனம் வருந்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!