• Apr 30 2026

ஒரே நாளில் கங்குவா டிரைலர் படைத்த சாதனை... செம குஷியில் சூர்யா ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

சிவா இயக்கிய இந்த படம் சூர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த படத்தில் மூலம் சம்பவம் செய்வாரா? சரித்திரம் படைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது கங்குவா  திரைப்படம்400 கோடி வரை பிசினஸ் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அதுவும் சூர்யாவின் கேரியரில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா திரைப்படம் முழுக்க முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. அதில் குறிப்பிட்ட பகுதி மட்டும் தான் பீரியட் படமாக உருவாகின்றதாம். அது தவிர  நிகழ்காலத்தில் நடக்கும் திரைக்கதை தான் மையமாக கொண்டுள்ளது.


மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் சிவாவை வாழ்த்து முகமாக கங்குவா  படத்தின் டிரைலர் வெளியானது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினாலும் ஒரு சிலர் பாகுபலி அச்சடித்தது போல் உள்ளதாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது சற்று முன் வெளியான கங்குவா  திரைப்படத்தின்டிரைலர்  5 மில்லியன் வியூக்களை பெற்று  ட்ரெண்டிங்கில் முதலாவது  இடத்தில் காணப்படுகின்றது. இந்த தகவல்கள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement