• Dec 25 2024

எதிர்நீச்சல் சீரியலில் அவசரமாக நடக்கும் ரகசிய கல்யாணம்! குணசேகரனுக்கு சரியான பதிலடி கிடைக்குமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் உமையாள் மாப்பிள்ளை இல்லாமலேயே தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறார்கள். மறுபக்கம் கதிர் சித்துவை  கடத்தி வைத்திருக்க, சக்தியை பின்தொடர்ந்து சென்று சித்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார் கரிகாலன்.

இதைத் தொடர்ந்து ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமிக்கு போனை போட்டு சித்துவை ஒப்படைக்க பேரம் பேசுகிறார்.

இன்னொரு பக்கம் தனக்கு ஆதரவாக இருந்த அனைவரையும் ஒதுக்கிவிட்டு தனது அப்பா பக்கம் நிற்கிறார் தர்ஷினி. மேலும் தனது அம்மாவை வெளியே போகுமாறு சொல்லி அதிர்ச்சியும் கொடுத்திருந்தார்.


தற்போது வெளியான ப்ரோமோவின் படி, சித்துவை எப்படியோ கதிரும் சக்தியும் சேர்ந்து  மீட்க, அஞ்சனாவையும் அவரது அம்மாவையும் காப்பாற்றுவதற்கு ஞானம், நந்தினி மற்றும் ரேணுகா ஆகியோர் உதவுகிறார்கள்.

அத்துடன் அஞ்சனாவுக்கும் சித்துவுக்கும் ரகசிய திருமண ஏற்பாடுகளை அவசர அவசரமாக ஜனனியின் டீம் செய்கிறது.

அந்த நேரத்தில், நந்தினி பதற்றத்துடன் ஜனனிக்கு போனை போட்டு, நேரமாகுது எப்ப கிளம்ப போறோம்? என கேட்க, மாப்பிள்ளை ரெடி பண்ணிட்டாங்க, பொண்ணும் ரெடியா தான் இருக்கு சரியான நேரம் பார்த்து கிளம்பி வரணும் என ஜனனி சொல்லுகிறார்.

சரியான நேரம் அது எங்களுக்கு எங்க இருக்கு? அவர்தான் அய்யனார் போல உட்கார்ந்திருக்கிறார். அரிவாள் ஒன்றுதான் இல்லை என நந்தினி பதற்றத்துடன் சொல்ல, ஜனனி மிகவும் கூலாக அவர் இருக்கும் போதே நாம கிளம்புறோம் என சொல்லுகிறார். இது நந்தினிக்கு ஷாக்காக இருக்கிறது. இதுதான் இன்றைய தினம் வெளியான எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ.

Advertisement

Advertisement