• Dec 26 2024

கம்பெனி விஷயத்தை ராதிகாவிற்கு சொல்ல வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி, வீட்டை விட்டு வெளியே போக முடிவெடுத்த எழில்- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஈஸ்வரி நிலாவிடம் கோபப்பட்டதைப் பார்த்த அமிர்தா நிலாவை வந்து துாக்கிடடுப் போகின்றார். அப்போது அங்கு எழில் வந்து அமிர்தா ஏற்கனவே கவலைல இருக்கிறா பாட்டி என்று சொல்ல, ஈஸ்வரி எங்களுக்கெல்லாம் கவலை இல்லையா எப்போ என்ன நடக்கும் என்றே தெரில, செத்தவன் திரும்ப வருவான் என்று நினைச்சோமா என்று சொல்கின்றார்.


இதனால் எழிலும் பாட்டியிடம் அமிர்தா, கணேஷ் கூட போக வாய்ப்பில்லை என்கின்றார்.மேலும் நாங்க இங்க இருந்தால் தானே பிரச்சினை நாங்க தனிக்குடித்தனம் போய்க் கொள்ளுறோம் என்கின்றார். இதைக் கேட்ட பாக்கியா அதிர்ச்சியடைகின்றார்.அத்தோடு எழில் போனதும் அப்படியெல்லாம் நடக்காது எழில் வீட்டை விட்டுப் போக நான் விடமாட்டேன் கவலைப்படாதீங்க என ஆறுதல்ப்படுத்துகின்றார்.

தொடர்ந்து செழியன் தனியாக இருந்து குடிச்சுக் கொண்டிருக்கும் போது கோபியும் வந்து சேர்ந்து குடிக்கின்றார். பின்னர் எழில் அந்தப் பக்கம் வர எழிலையும் கூப்பிட்டு செழியன் குடிக்க வைக்கின்றார். அப்போது செழியன் நீங்க எங்க கூட இருந்து எங்களுக்கு சர்ப்போட் பண்றது தான் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று சொல்கின்றார்.


அப்போது கோபி எங்க மூன்று பேருக்குமே பொண்ணுங்க தான் பிரச்சசினையே, நாம நிறைய விஷயம் நல்லதாப் பண்ணிிருப்போம். ஆனால் சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பாடாய்ப் போட்டு படுத்துவாங்க என்று அட்வைஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போது அங்கு முதலில் ராதிகா வருகின்றார்.

ராதிகா எதுவும் சொல்லாமல் கிளம்ப,எழிலைத் தேடி அங்கு பாக்கியா வருகின்றார். அத்தோடு இவர்கள் மூவரும் குடித்துக் கொண்டிருப்பதை் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு எழிலையும் செழியனையும் திட்டிக் கூட்டிட்டு  போக, கோபி ராதிகாவிடம் ஆபீஸ் பிரச்சினை அதனால் தான் குடித்தேன் என்று புலம்புகின்றார்.


அப்போது ஆபிஸ்ல என்ன என்று கேட்க ஆபிஸை மூடப் போகின்றேன் என்று சொல்ல ராதிகா, எவ்வளவு பேரு வேலை இல்லாமல் இருக்கிறாங்க நீங்க ஆபிஸை மூடிட்டு என்ன பண்ணப் போறீங்க, வேணும்னா நான் ஒரு மாதம் லீவை போட்டிட்டு உங்க ஆபீஸ்ல வேலை செ்து தாறேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோாட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement