ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் திரிஷா மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி மேலும் தல இப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளதுடன் சமீபத்தில் வெளியாகிய இரண்டாவது சிங்கிள் அஜித் ரசிகர்களால் வரவேற்கும் அளவிற்கு அமைந்திருந்தது.
மேலும் இந்த படம் "விடாமுயற்சி " படத்தை போல் இல்லாமல் ரசிகர்களால் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ளது. இப் படத்தின் trailor நேற்று வெளியாகிய சிறந்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது. ஷாலினி மற்றும் சிம்ரன் ஆகியோர் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 10 ஆம் திகதி திரையரங்குகளில் படத்தினை வெளியிடுவதற்காக படக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் ஒன்று காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 80,90 வீதங்களில் புக்கிங் full ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு ஏகப்பட்ட கார்ப்பிரேட் புக்கிங் நடந்துள்ளதாகவும் முழு டிக்கெட்டையும் தங்களது பணியாளர்களுக்காக எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
Listen News!