கங்குவா படம் வசூல் ரீதியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தினை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ " எனும் படத்தில் நடித்து வருகின்றார். படம் மே முதலாம் தேதி வெளியாகவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் வைரலாகியுள்ளது.
மற்றும் சூர்யா rj பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்திலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்திலும் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார். மேலும் இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்களில் ஒரு சிலர் மாத்திரமே காதல் காட்சிகளில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து நடித்து வருகின்றனர். சிலர் அந்த வயதை தாண்டி உள்ளனர்.
மற்றும் சூர்யா இரண்டுக்கும் இடையில் இருப்பதால் தற்போது இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாரணம் ஆயிரம் போன்ற ஒரு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் படம் குறுகிய கால இடைவெளியில் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசலில் நடிக்கவுள்ளார்.
Listen News!