• Dec 27 2024

தனுஷின் மேஜிக் வாய்ஸில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சிங்கிள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தற்போது இயக்குனராகவும் களமிறங்கி அதில் வெற்றி கண்டுள்ளவர் தான் தனுஷ். இவர் மூன்றாவது முறையாக இயக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இயக்கி வருகின்றார் தனுஷ்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை முதலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பு 2016 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த ப்ராஜெக்ட் கை கூடவில்லை.

இதன் காரணத்தினால் தனுஷ் அந்த திரைக்கதையை வாங்கி அவரே இயக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷ் மூன்றாவது இயக்குனர் ஆக களமிறங்கும் படம் இது என்பதோடு, இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி  வைரலாகி உள்ளது.

இந்த பாடலில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடனமாடியுள்ளார். ஒரு பெப்பியான காதல் பாடலாக ஜிவி பிரகாஷ் இந்த பாடலை இசை அமைத்துள்ளார். இதில் ஹைலைட்டாக காணப்படுவது தனுஷின் வாய்ஸ். இந்தப் பாடலில் வித்தியாசமான வாய்ஸில் முயற்சி செய்திருக்கிறார். இந்த பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றது.


Advertisement

Advertisement