நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்டம்பர் 17) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு இருந்து கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி பயணமானார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், “நான் 'ஜெயிலர் 2' படப்பிடிப்புக்காக பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும்,” என்றார். தொடர்ந்து, திரைக்கலைஞர்களுக்கு ஏற்படும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற செய்தியாளர் கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என பதிலளித்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, பயணிகள் தினத்தை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய இன நடனமாடி பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் வருகையையொட்டி அவருக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பின் போது, மாணவிகள் ரஜினிகாந்துடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 'ஜெயிலர் 2' திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகமான 'ஜெயிலர்' பெரும் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.
Listen News!