இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் வாழ்ந்த அதிசயமான வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மா வந்தே' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Silver Cast Creations நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். சிறுவயதிலிருந்து நாட்டின் தலைவராக உயர்ந்த மோடியின் வாழ்க்கையை இந்த திரைப்படம் உண்மை சம்பவங்கள் மற்றும் உணர்வுபூர்வமான சம்பந்தங்களை கொண்டு விவரிக்கிறது.
முக்கியமாக, மோடியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த அவரது தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான அன்பு பிணைப்பு, இந்த படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
இந்த பான்-இந்தியா திரைப்படம் அனைத்துப் பிராந்திய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளது. சர்வதேச தரத்தில் VFX, முன்னணி நுட்ப நிபுணர்கள் மற்றும் பிரமாண்டமான தயாரிப்பு தரத்தில் உருவாகும் இப்படம், நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் தேசிய உணர்வை வலியுறுத்தும்.
இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, கிராந்தி குமார் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவில் K.K. செந்தில் குமார், தொகுப்பில் ஸ்ரீகர் பிரசாத் பணியாற்ற உள்ளனர்.
இந்த திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மோடியின் ரசிகர்களுக்குப் பெரும் பரிசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!