நடிகர் சித்தார்த் கதாநாயகனாக சித்தா என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் இவருடைய நடிப்பும் வரவேற்கப்பட்டது. அதன் பின்பு இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். ஆனால் அந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகை அதிதியை காதலித்து வந்த சித்தார்த், அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
சித்தார்த்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது. அதேபோல அதிதிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பின்பே இருவரும் ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஒன்றாக நடித்து காதலித்து தற்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சித்தார்த் அதிதி திருமணம் செய்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி ஆகி உள்ளது. இதனை தெரிவிக்கும் விதமாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். தற்போது இந்த ஜோடிக்கு பலரும் தங்களுடைய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!