• Sep 17 2026

முழு நடிகனாக இருக்க தகுதியே இல்ல... – மனம் திறந்த விஜய் ஆண்டனியின் பேட்டி வைரல்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக வெற்றிகரமான இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. இசை, நடிப்பு என பன்முக திறனுடன் கலையுலகில்  சாதித்து வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் பகிர்ந்த தன்னம்பிக்கையுடன் கூடிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. விஜய் ஆண்டனியின் இந்த பேட்டி, அவரின் நேர்மை மற்றும் புரிதலை காட்டுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி தனது கேரியர் குறித்து சிறப்பாக கூறியிருந்தார். அதன்போது, "நான் விளையாட்டா நடிக்கணும் என்று தான் கேரியரை ஆரம்பிச்சேன். முழு நடிகனாக இருக்க எந்த தகுதியும் கிடையாது. ஓப்பனாக ஒத்துக்கொள்ளுறேன்."

மேலும், "ரஜினி, கமலோட கம்பெயார் பண்ணும் போது எனக்கு முழு நடிகனாக இருக்கிற தகுதியே கிடையாது. நான் கதாநாயகனாக நினைத்தது சலீம், பிச்சைக்காரன் போன்ற படத்திற்கு பிறகு தான்..." என்றும் தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. இந்த உண்மையான ஒப்புதல், அவரின் வளர்ச்சியை வெளிக்கொணர்கிறது. 

Advertisement

Advertisement