தமிழ் சினிமாவின் மறக்க முடியாத குடும்பத் திரைப்படமாக கருதப்படும் "சூரியவம்சம்" படத்தில், தேவயானி, சரத்குமார் , மற்றும் பிரியா ராமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படம் திரை ரசிகர்களின் மனதில் என்றும் இடம் பிடித்தவை. இப்போது, இந்த புகழ்பெற்ற படத்தில் இருந்து ஒரு மறைக்கப்பட்ட தகவலை, நடிகை மோகினி தனது சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதின்படி, பிரியா ராமன் நடித்த நெகட்டிவ் கேரக்டருக்கு முதலில் தன்னைதான் இயக்குநர் விக்ரமன் கேட்டு வரவழைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த வாய்ப்பை ஏற்காததற்கான காரணங்களை சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும் விளக்கியுள்ளார் நடிகை.
மோகினி அதன்போது கூறியதாவது, “சூரியவம்சம் படத்தில் பிரியா ராமன் நடித்த ரோல்- அதாவது ஹீரோவுக்கு எதிராக செயல் படும் கேரக்டரிற்கு முதலில் என்னை தான் இயக்குநர் விக்ரமன் கேட்டார். ஆனா நான் உடனே கேட்டேன், ‘நான் ஏன் ஹீரோவுக்கு துரோகம் பண்ணுற ரோலில் நடிக்கணும்?’. அதைவிட எனக்கு தேவயானி நடிச்ச கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு. அதான் அந்த ரோல் கொடுங்கன்னு கேட்டேன்...”
இதற்கு இயக்குநர் விக்ரமன் பதிலளித்தபோது, "தேவயானியை ஏற்கனவே புக் பண்ணிட்டேன். நீங்க இந்த ரோல் பண்ணீங்கன்னா நல்ல பெயர் வரும். முக்கியமான கேரக்டர் தான்." என்றார்.
இந்தக் கேள்விக்கு அவர், “நான் நெகட்டிவ் கேரக்டர்ல நடிக்க மாட்டேன். ஒரு தடவை அப்படிப் பண்ணிட்டா, அடுத்து எல்லாம் வில்லி ரோல்கள் தான் கிடைக்கும். நான் என் ரசிகர்களிடமிருந்து வில்லி எனும் பெயரை வாங்கிக்க வேண்டாம். அதனால் அந்த வாய்ப்பை மறுத்தேன்.” என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!