• Apr 18 2026

“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் 100வது நாள் கொண்டாட்டம்.. – வைரலாகும் சிறப்பு போஸ்டர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளிவந்த நகைச்சுவை குடும்ப படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வரிசையில், ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான “ஆண்பாவம் பொல்லாதது” படம் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளது. குடும்பத் தலைவனாகும் நாயகன் திருமணத்துக்குப் பிறகு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகளுடன் படம் வெளிப்படுத்தியது.


இந்த படத்தின் நாயகனாக ரியோ ராஜ் மற்றும் நாயகியாக மாளவிகா மனோஜ் நடித்துள்ளனர். இருவரின் நடிப்பு, காமெடி மற்றும் காட்சிகளின் அமைப்பு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ரியோ ராஜுன் நகைச்சுவை நேர்த்தி மற்றும் மாளவிகாவின் நடிப்பு கதையின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

இப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், இன்று இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் காட்சியளித்ததை நினைவுகூரி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டர் வெளியீடு, படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. 

Advertisement

Advertisement