• Jan 19 2025

டிமான்டி காலனி பட இயக்குநருக்கு திடீர் திருமணமா? இணையத்தில் வைரல் போட்டோஸ்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் அஜய் ஞானமுத்து. இவருடைய முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனாலும் அதற்குப் பிறகு  மூன்று வருடங்கள் எந்தவொரு படமும் இயக்கவில்லை.

இடைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

d_i_a

அதன் பின்பு விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கினார். மிகப்பெரிய  எதிர்பார்ப்போடு வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியை தழுவியது. இறுதியில் டிமான்டி காலனி 2 படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.


தற்போது டிமான்டி காலனி படத்தின் மூன்றாவது பாகத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு சில படங்களின் மூலம் சினிமாத் துறையில் மிகப்பெரிய வெற்றி கண்டவர் தான் அஜய் ஞானமுத்து.

இந்த நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகின்றன.


Advertisement

Advertisement