• Jan 19 2025

எத்தனை முறைதான் திகதி மாற்றுவது! தயாரிப்பாளருக்கு தலையிடியாக மாறிய விடாமுயற்சி!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தார்கள். ஒருவாறு பல சிக்கல்களை தாண்டி தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எண்ணி இருந்த நேரத்தில் மீண்டும் திகதி மாற்றப்பட்டு பெப்ரவரி 6ம் திகதி ரிலீசாக இருக்கிறது. இதனால் சில படங்களுக்கு தலையிடியாக மாறியுள்ளது விடாமுயற்சி.


பொங்கல் ரேசில் இருந்து விடாமுயற்சி பின்வாங்கியதன் பிறகு மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை என சில படங்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்த மாதம் டிராகன், NEEK ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக இருந்தது. தற்போது விடாமுயற்சி அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளதால் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் ரிலீஸ் திகதி மாற்றபட்டுள்ளது. இதனை அவரே தனது பேஷ்னல் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  


பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரவபூர்வமாகவே அறிவித்திருந்தனர். விடாமுயற்சி படத்தினால் தற்போது பிப்ரவரி  21ஆம் திகதி வெளியாக இருக்கிறது. 


அதேசமயம் பிப்ரவரி 7ம் திகதி ரிலீஸாக இருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் விடாமுயற்சி வருகையால் தனது ரிலீஸ் திகதியை பிப்ரவரி 21ம் திகதிக்கு முன்னரே மாற்றி இருந்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன்  மற்றும் நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கிறது. இரண்டு படங்களுமே காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம். இதனால் வசூலில் அடிவாங்குமா அல்லது வெற்றிபெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement