• Apr 04 2025

ஒரே காரில் தம்பதிகளாக ஜோடி போட்டு வந்து விவகாரத்துச் செய்த இளம் ஜோடி...!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக மட்டுமின்றி தற்போது முன்னணி கதாநாயகனாகவும் திரையுலகில் பிஸியாக இருக்கின்றார். இவருடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய துணையாக இருந்தவர் பாடகி சைந்தவி.

இவர்கள் இருவரும் நீண்ட நாள் காதலுக்குப் பிறகு, கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகினார். இந்தக் காதல் திருமணத்துக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு இருந்தது. இந்நிலையில், அவர்களின் திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே வதந்திகள் கிளம்பியிருந்தன. தற்போது அந்த வதந்திகள் உறுதியாகும் வகையில், இருவரும் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரே காரில் வந்த ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள், எதிர்பாராதவிதமாக விவாகரத்து மனுத்தாக்கலுக்கு ஆஜராகி உள்ளனர். அம்மனுவில் “இருவரும் மனம் ஒத்துத் தான் பிரிவதாகக் கூறியுள்ளனர். 

மேலும் எவ்விதப் பிரச்னையுமின்றி, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர். விவாகரத்து மனுவை பெற்ற நீதிபதி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார். வழக்கின் அடுத்த திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.



Advertisement

Advertisement