• May 30 2026

சூர்யா படத்தை பார்த்து அமீர் கான் கொடுத்த ரியாக்ஷன்.! இறுதியில் நடந்த ட்விஸ்ட்?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் மே 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஃபேண்டஸி ஆக்ஷன் கதையம்சத்துடன் உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில், ‘கருப்பு’ படம் வெளியான பிறகு திரையுலகில் இருந்து கிடைத்த வரவேற்பு குறித்து பல தகவல்களை இயக்குநர் RJ பாலாஜி பகிர்ந்தார்.


அதன்படி அவர் கூறுகையில், பாலிவுட் நடிகர் அமீர் கான் சூர்யாவுக்கு நேரடியாக செய்தி அனுப்பி படத்தை பாராட்டியதாகவும், பின்னர் அந்த செய்தியை சூர்யா தன்னிடம் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல் நடிகர் சிம்பு போனில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்ததாகவும், மேலும் பல முன்னணி இயக்குநர்களும் படக்குழுவை தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும் RJ பாலாஜி கூறினார்.

படத்தின் கதை சொல்லும் விதம் குறித்து பேசிய RJ பாலாஜி, படத்தை புரிய வேண்டிய விதத்தில் தான் நான் சொல்லியிருக்கிறேன். அதனால் தான் முதல் பாதியில் பார்வையாளர்கள் கதையுடன் இணைந்தார்கள். இரண்டாம் பாதியில் கதை சற்று மெதுவாக இருந்தாலும், ரசிகர்கள் படத்தை தொடர்ந்து ரசித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்த படத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ தொடர்பான ஒரு வசனத்தைச் சொல்ல சூர்யா முதலில் தயங்கியதாக RJ பாலாஜி தெரிவித்தார்.

“அந்த வசனத்தை சொல்ல சூர்யா சார் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அதை நீக்கலாமா என்றும் கேட்டார். மற்ற படங்களை கிண்டல் செய்ய வேண்டாம் என்பதே அவரது எண்ணம்” என்று RJ பாலாஜி கூறினார்.

ஆனால் படம் வெளியான பிறகு அந்த வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement