• Dec 27 2024

டைவர்ஸ் இன்ஸ்டா போஸ்டுக்கு லைக் போட்ட அபிஷேக் பச்சன்.. ஐஸ்வர்யா ராய் ரியாக்சன் என்ன?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இன்ஸ்டாகிராமில் டைவர்ஸ் குறித்த பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் என்பதும் இந்த ஜோடி மீது  யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் பிரிய போவதாக வதந்திகள் பரவி வருகிறது.

இருப்பினும் மகளின் வாழ்க்கைக்காக இருவரும் தற்போது விருப்பம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் எந்த நேரத்திலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வெடித்து டைவர்ஸ் அப்ளை பண்ணும் அளவுக்கு சென்று விடும் என்றும் பாலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு கூட அபிஷேக் பச்சன் தனது தந்தை அமிதாப் பச்சனுடன் வருகை தந்தார் என்பதும் அதேபோல் தனது மகள் ஆராதனாவுடன் ஐஸ்வர்யா ராய் வருகை தந்தார் என்பதும் இருவரும் தனித்தனியாக வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..



இந்த நிலையில் சமீபத்தில் கிரே டைவர்ஸ் என்ற பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளார். 50 வயதை கடந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு இருந்தாலும் குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து டைவர்ஸ் செய்வதற்கு பெயர்தான் கிரே டைவர்ஸ் என்று கூறப்பட்டு வருகிறது. அந்த கிரே டைவர்ஸ் குறித்த பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்துள்ளார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் 50 வயதை தொட்ட நிலையில் இந்த பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்யப்பட்டதை அடுத்து ஐஸ்வர்யா ராய் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement