• Dec 26 2024

நடிப்பு ஒரு பக்கம் புதிய பிஸ்னஸ் ஒருபக்கம்... அந்த பிஸ்னஸ் தொடங்கிய சன்னி லியோன்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

இந்தியா முழுவதும் நடிகை சன்னி லியோன் மிகவும் பிரபலமானவர். பாலிவுட் சினிமாவில் முதலில் நடிகையாக வலம் வந்தவர் பின் தமிழ் சினிமா பக்கம் வந்தார். இந்நிலையில் நடிப்பை தாண்டி தற்போது வேற பிஸ்னஸ் செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வடகறி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து 2019ல் மதுரராஜா, 2022ல் காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட், 2023ல் தீ இவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.


மேலும் கொட்டேஷன் கேங் மற்றும் வீரமாதேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார், இப்படங்கள் இரண்டும் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் ஒரு உணவகம் திறந்துள்ளார், அதற்கு Chica Loca என்று பெயர் வைத்துள்ளார்.


மேலும் இந்த உணவகத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ரூ.1000 செலுத்தினால் என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் விதவிதமான உணவுகளை சுவைக்கலாம் என கூறுகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இனி படம் நடிக்க மாட்டிங்களா? பிஸ்னஸ் மட்டும் தான் பண்ண போறீங்களா என கமென்ஸ்கள் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement