• Jun 03 2026

டைட்டிலே அதிரடி., டீசரே சர்ச்சை.! கவுதம் கார்த்திக்கின் புதிய அவதாரம்.! வெளியான வீடியோ

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கவுதம் ராம் கார்த்திக், மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார். 

மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், பத்து தல, ஆகஸ்ட் 16, 1947 உள்ளிட்ட படங்கள் மூலம் தனது நடிப்புத் திறனை நிரூபித்தார்.

இதற்கிடையில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்களை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். தற்போது தனது 19வது திரைப்படமாக உருவாகி வரும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

‘டாடா’ திரைப்படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிக்கும் இந்த படத்தை தினா ராகவன் இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், சமூக அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசும் இயக்குநர் ராஜூ முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே. பாபு மற்றும் சௌமியா பாரதி எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தார். டீசரில் இடம்பெற்ற உரையாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. 

குறிப்பாக ஒரு கொடிக்கம்பத்தின் அரசியல் அடையாளத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்த காட்சிகள், சி.என்.அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள பல அரசியல் குறிப்புகளை உள்ளடக்கியதாக ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியது.

இந்த நிலையில், ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், அதிகாரம், கொள்கை, மக்கள் மனநிலை என பல பரிமாணங்களை பேசப்போகும் இந்த திரைப்படம், கவுதம் ராம் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement