• Mar 01 2025

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் - சோகத்தில் ரசிகர்கள்...!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவரே நடிகர் அஜித் குமார். இவர் நேர்கொண்ட பார்வை , வலிமை , வீரம் மற்றும் துணிவு போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்து கொண்டார்.  சமீபத்தில்  இவரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் திரைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அதிகளவான வசூலை பெற்றுக் கொண்டது.

அத்துடன், அஜித் படங்கள் பலவற்றை நடித்திருந்தாலும் அவருக்கு  கார் ரேஸில் கலந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. இதனால் சமீபகாலமாக  கார் ரேஸிங்கில் பங்குபற்றி வருகின்றார். அஜித்  கடந்த மாதம் துபாய் கார் ரேஸில் பங்குபற்றி  வெற்றியடைந்து கொண்டதுடன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து பத்மபூஷன் விருதையும் வாங்கி இருந்தார். 


அந்த வகையில் , தற்போது அஜித் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் போர்ச்சுகலில் கார் ரேஸ் பயிற்சியை பெற்றுக் கொண்டிருந்தபோது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளதுடன் அந்த காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதன்போது , அஜித்திற்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தாலும்  தல ரசிகர்கள்  அனைவரும் மிகுந்த சோகத்திலேயே  உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.







Advertisement

Advertisement