• Dec 26 2024

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பான்மையாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் கர்ணன், வாத்தி போன்ற படங்கள் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு இறுதியாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியானது. அது ஓரளவுக்கு வசூல் ரீதியில் சாதனை படைத்திருந்தது.


இதை தொடர்ந்து தற்போது ஆறுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.  அதிலும் குறிப்பாக ராயன், குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இளையராஜாவின் பயோபிக் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன.

இந்த நிலையில், தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடருவதற்காக நடிகர் தனுஷ் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.  இதைத்தொடர்ந்து அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement