• Dec 25 2024

படம் தோல்விக்கு ஹீரோதான் காரணமா? ஓபனாக பேசிய நடிகர் மோகன்லால்...

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சமீபத்திய பேட்டியில் நான் நடித்த நல்ல படம் படும் தோல்வி அடைந்தது. ஒரு படத்தின் தோல்விக்கு வேறு காரணங்கள் இருந்தாலும் ஹீரோவைத்தான் சொல்வார்கள் என்று உருக்கமாக பேசியிருந்தார். இவர் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் இது குறித்து பார்க்கலாம். 


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால் " நான் ஒரு சிறப்பான இயக்குநரின் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்ற திரைபடத்தில் நடித்தேன். நல்ல படம் ஆனால் படும் தோல்வியை சந்தித்தது. இதனால் எனது ரசிகர்களும் கவலை அடைந்தார்கள். படம் தோல்விக்கு வேறு காரணங்கள் இருந்தாலும் ஹீரோவைத்தான் காரணம் சொல்வார்கள்" என்று கூறினார்.


மேலும் பேசிய இவர் "தற்போது இளம் இயக்குநர்களின் கதைகளை கேட்டு வருகிறேன். புதிய கதைகளுக்கு மக்கள் விரும்புகிறார்கள். அப்படி சமீபத்தில் பகத் பஷில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் அருமையான ஒரு நகைச்சுவை திரைப்படம். அதனை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவனுடன் எனது அடுத்த படம் உருவாக இருக்கிறது"  என்று தனது அடுத்த படத்தின் இயக்குநர் குறித்தும் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால்.

Advertisement

Advertisement