தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, தனது தனித்துவமான நகைச்சுவைப் பாணியில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பிரேம் ஜி. அத்தகைய பிரேம் ஜி சமீபத்திய நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான தருணங்களை உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்திருந்தார்.
பிரேம் ஜி தனது ஆரம்ப காலத்தில் திரையுலகு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தவர். அந்தக் காலங்களில் தான் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து மகிழ்ச்சியுடன் வந்ததாக அந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மேலும் பேச்சிலர் வாழ்க்கை மிகவும் இனிமையான நினைவுகளாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரேம் ஜி தனது கல்யாண வாழ்க்கை அனுபவங்களையும் கூறியிருந்தார். அதன்போது, "இப்ப நான் வெளிய கூட போறது இல்ல என்று கூறியதுடன் எந்த நேரமும் வீட்டில தான் இருப்பேன். வெளியில சுத்துறது, வீணாக தங்குவது எல்லாம் பேச்சிலர் காலத்தோட முடிந்து விட்டது." என்று சிரித்தபடியே கூறியிருந்தார். அத்துடன் பேச்சிலர் வாழ்க்கையின் சந்தோசம் கலியாணம் செய்தால் கிடைக்காது என சற்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
Listen News!