• Dec 26 2024

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு- அவர் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாப் புயலால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஏரிகளில் அதிகமான நீர்பெருக்கு காரணமாக இந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. 

 மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாக போராடி பல இடங்களில் இயல்பு நிலையை கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை. இதனால் சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை பிரபலங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 


நடிகர் விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் அமீர்கான், நமீதா, ஆத்மிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் இந்த வெள்ளத்தில் சிக்கி சமூக வலைதளங்கள் மூலமாக பாதிக்கப்பட்டதை வெளியில் கூறினர். தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வசித்துவரும் போயஸ் கார்டன் பகுதியும் இந்த மழைக்கு மிகவும் கடுமையான பாதிப்புகளை அடைந்துள்ளது. 


இந்நிலையில் போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் வீடும் மழை வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ரஜினியின் வீட்டிற்குள்ளேயும் தண்ணீர் புகுந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பு காரணமாக வீட்டில் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரும் பண்ணை வீட்டில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Advertisement

Advertisement