• Apr 17 2026

கஷ்டங்கள் வரும், அதுல இருந்து நம்ம தான் மீண்டு வரணும்- மனம் நொந்து பேசிய பப்லுவின் காதலி ஷீத்தல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ்.இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.


என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் ஷீத்தல் பப்லுவுடன் இருக்கும் போது பெண்களுக்கு மோடிவேசன் கொடுக்கும் விதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், கஷ்டங்கள் எல்லாருக்குமே வரும், அதுல இருந்து நம்ம தான் மீண்டு வரணும் பெண்கள் எதிலும் மூழ்கிப் போய் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement