• Apr 18 2025

சிறுவனை போட்டியாக நினைத்து சரிசமமாக நடனமாடிய நடிகர் ரோபோ சங்கர்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல மேடை பேச்சாளர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமத்தில்  விளங்குபவரே ரோபோ சங்கர். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து வருகின்றார். குறிப்பாக , மாரி , புலி மற்றும் தீபாவளி போன்ற படங்களில் இவரது நகைச்சுவையை பார்த்து இவருக்கென பல ரசிகர்களும்  உள்ளனர்.

மேலும் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சமீபத்தில் திருமணமாகி தற்போது அவர்களுக்கு குழந்தையும் பிறந்து உள்ளது. ரோபோ சங்கர் தற்போது தாத்தா ஸ்தானத்தைப் பெற்றும் அவர் இப்பவும் சின்ன பிள்ளைகள் மாதிரியே நடந்து கொள்ளுகின்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


சமீபத்தில் திருமண விழா ஒன்றில் ரோபோ சங்கர் கலந்துள்ளார். அங்கே சிறுவன் ஒருவன் உறவினர்கள் முன்னிலையில் நடனமாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். இதனை பார்த்த ரோபோ சங்கர் அந்த சிறுவனுக்கு போட்டியாக தனது திறமையை காட்ட வேண்டும் என்று  நினைத்து ரோபோ சங்கர் தானும் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கு கேலியாக இருந்ததுடன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.


Advertisement

Advertisement