நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை மற்றும் உருவத்தை (likeness) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் முன் அனுமதியின்றி உருவாக்கி, இணையத்தில் பகிரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, நடிகை ஐஸ்வர்யா ராய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவை இன்று (செப்டம்பர் 11, 2025) பிறப்பித்துள்ளது. நடிகையின் அனுமதி இல்லாமல், அவரது உருவத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் எவ்விதமான புகைப்படங்களும், வீடியோக்களும்மற்றும் AI-generated உள்ளடக்கங்களும் தடைசெய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இது போன்ற தவறான உள்ளடக்கங்களை பகிரும் இணையதளங்களை 7 நாட்களுக்குள் தடை செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இணைய தளங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் போலி இணைய முகவரிகள் போன்றவை இதில் அடங்கும்.
இந்த உத்தரவு, பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் பிரசாரம் செய்யும் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற deepfake மற்றும் AI மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இது விளங்குகிறது.
Listen News!