விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடம் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகர் நாஞ்சில் விஜயன். வெவ்வேறு கெட்டப்புகளில் சிரிப்புகளை வாரி வழங்கிய அவர், 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகியதாகவும், தனது நம்பிக்கையை பயன்படுத்தி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாருக்கு பதிலளிக்க நடிகர் நாஞ்சில் விஜயன் தனது தரப்பிலிருந்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்: “எனது முன்னாள் சக ஊழியர் வைஷ்ணவி என்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை வைத்து என் குடும்ப வாழ்க்கையும், சமூகத்திலும் எனது மதிப்பையும் சிதைக்க முயற்சி செய்கிறார். அவர் ஒரு திறமையான கலைஞர் என்பதையும், தொழில்முறையில் பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியதையும் மறுப்பதில்லை. ஆனால், அவர் கூறும் போல எங்களுக்கு காதல் அல்லது உடல் தொடர்பு ஏதும் இல்லை.
நாங்கள் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம் என்பதும், 3 லட்சம் பணம் கொடுத்தேன் என்பதும் துட்டு பொய்கள். அவரிடம் இருந்து பணம் பெற்றதாக எதுவும் நிகழவில்லை. இருந்தால் பரிமாற்ற ஆதாரங்களை வெளிக்கொணரலாம். மேலும், ‘திருமணம் செய்துவிட்டேன்’ என்பது மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் பொய்யான குற்றச்சாட்டு. என் மனைவி மரியாவை, இரு குடும்பங்களின் சம்மதத்துடன், சட்டப்படி திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்த அழைப்புகள் என் குடும்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்தியது. பலமுறை எச்சரித்தும் தொடர்ந்ததால், அவர் நம்பரைத் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. என் மனைவியையும், மாமியாரையும் இச்சம்பவத்தில் இழுப்பது தவறு. அவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடாதவர்கள். அவர்களது தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
நான் ஒருபோதும் திருநங்கை சமுதாயத்துக்கு எதிராக எதுவும் பேசவில்லை. எனக்கு அந்த சமூகத்தில் பல நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். இந்த பிரச்சனை அந்த சமூகத்தின் மீது பழி சுமத்தக் கூடாது. உண்மையில் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால், அதை சட்ட வழியில், நேர்மையாக எதிர்கொண்டு வந்திருக்கலாம்.”
இவ்வாறு அவர் கூறியதுடன், “என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் என் ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் என் குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
Listen News!