• Dec 26 2024

80ஸ் நாயகனாக நடிகர் சந்தானம்... ரிலீஸ் ஆனா பில்டப் திரைப்படம் எப்படி இருக்கு... முழுவிமர்சனம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் பல படங்களில் காமெடியில் கலக்கினாலும் ஹீரோவாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் மறுபடியும் காமெடி ஆக்டராகவே காலத்தை ஓட்டலாம் என்று முடிவெடுத்த பொழுது ஜூலை மாதம் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் படம் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது.


இவர் நடிப்பில் இன்று வெளியான படம் தான் 80ஸ் பில்டப். இப்படத்தை குலேபகாவலி, காத்தாடி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண் டைரக்ட் பண்ணி இருக்கிறார். இப்படி இவர் எடுத்த படங்கள் அனைத்தும் காமெடி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.


அதனால் சந்தானம் கூட்டணியில் இவருடைய காமெடி ட்ராக் ஒர்க் அவுட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இப்படத்தில் தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அத்துடன் சந்தானத்திற்கு ஜோடியாக சன் டிவியில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ராதிகா பிர்த்தி நடித்திருக்கிறார்.


இப்படத்தின் கதை ஆனது 1980களில் ஒரு இளைஞன் காதல் வாழ்க்கையில் அகப்பட்டு கொள்ளும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு வருகிறது. அதாவது ஒரு ரகசிய குழு விலைமதிப்பற்ற ஒரு கத்தியை திருடுவதற்கான வேலையை பார்க்கிறது. அதை தடுப்பதற்காக சந்தானம் அவருடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பலமுறை முறியடிக்கிறார்.


இதனை அடுத்து அமானுஷ்ய சக்தி இந்த விஷயத்திற்குள் நுழைந்து பல சாகசங்களை செய்கிறது. இதற்கிடையில் நகைச்சுவை, காதல் என அமைத்து படத்தை எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்பது தான் 80s பில்டப் படத்தின் ஸ்டோரியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தை பார்த்த மக்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement