• Dec 25 2024

சும்மா தேவையில்லாம பேசாத! அவருதான்டா வரணும் அரசியலுக்கு! கொந்தளித்த நடிகர் ஷாம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி அரசியலுக்கு வந்த பின்னர் ரசிகர்கள், பிரபலங்கள், சமூக ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனைவருமே அதனை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜயின் அரசியல் வருகையால் அவர் தளபதி 69ன் பின்னர் சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிடுவதாக உள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இருப்பின்னும் தளபதியின் தீவிர ரசிகர்கள் இதனை சோகமாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து இவ்வாறு கூறியுள்ளார். நிறைய பேர் சொன்னாங்க எதுக்கு அவருக்கு அரசியல் என்று அவர் தான்டா அரசியலுக்கு வரணும். அவரு எவ்வளோ நேர்மையானவர், மக்களுக்காக நிறைய செய்திருக்காரு. அவருக்கு தேவையான அளவுக்கு அவர்கிட்ட பணம் இருக்கு. அவர் பணத்துக்காக வரேல்ல அரசியலுக்கு.  


ஒரு படத்துலையே நல்ல சம்பாதிப்பாரு, அப்போ அது எல்லாம் விட்டுட்டு அவரு அரசியலுக்கு வாராருன்னா மக்களுக்காக வாராரு. மக்களுக்கு நல்லது செய்யணும்னு வாராரு. சும்மா தேவையில்லாம பேசவேண்டாம் தெரியாதா உனக்கு. முதல் வந்த நடிகர்கள் அரசியலில் என்ன செய்தார்கள் என்பதைவைத்து கதைக்க வேண்டாம். அவங்க வேற அண்ணே வேற. அவருமாதிரி இல்ல இவரு. விஜய் அண்ணாபத்தி தெரியலனா விட்டுருங்க தேவையில்லாம பேசவேண்டாம் என்று கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement