• Dec 25 2024

சரியாக நடக்க முடியாமல், மனைவி ஜோதிகாவுடன் மும்பைக்குச் சென்ற நடிகர் சூர்யா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் சூர்யா.இவர் இயக்குநர் சிவா இயக்கத்தில் கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் இப்படத்தின் ஷுட்டிங் முடிவடையப் போவதாக் கூறப்பட்டது.

இந்த மாதத்துடன் சூர்யாவின் போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாகவும் அவர் தொடர்ந்து சுதா கொங்கரா படத்தின் சூட்டிங்கில் அடுத்த மாதத்தில் இணையவுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டன.


இந்த நிலையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. கடந்த 23ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டைக்காட்சி தொடர்பான சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாகவே சூட்டிங் நடந்துள்ளது.

 சண்டைக் காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததையடுத்து காயமடைந்த சூர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதனால் கங்குவா படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு தனது மனைவி ஜோதிகாவுடன் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement