• Dec 24 2024

எனது கனவு நிறைவேறியது! கூலி மாபெரும் வெற்றி தான்- நடிகர் உபேந்திரா

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் உபேந்திரா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் " என்னோட படம் நார்மலாவும் இருக்கும்  அரசியலும் பேசும் என்று கூறியுள்ளார். மேலும் கூலியில் ரஜினிகாந்துடன் பணியாற்றுகிறேன் ரொம்ப மகிழ்ச்சி, அது எனது கனவு' என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 


நடிகர்  உபேந்திரா நடிப்பில் வெளியான u1 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் ரஜனிகாந்த் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில் "என்னுடைய படம் சிறப்பான இயக்குநருடன் அமைந்துள்ளது. நிறைய அனுபவங்கள், நினைவுகளை தந்தது. U1 திரைப்படத்தை நீங்க நார்மலா பார்த்தா நோர்மல் திரைப்படம் அரசியலா பார்த்தா அரசியல் திரைப்படம்" என்று கூறினார். 


மேலும் பேசிய இவர் "ரஜினி சாருடன் கூலி திரைப்படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி, நீண்ட நாள் கனவு அது,  ஷூட்டிங் கூட வேகமாக நடந்து வருகிறது. படம் 2025 கோடையில் நிச்சியம் ரிலீசாகும். கூலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்று கூறியுள்ளார் நடிகர் உபேந்திரா.  


Advertisement

Advertisement