• Dec 25 2024

GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரசாந்த் செய்த தரமான சம்பவம்... அதிர்ச்சியில் உறைந்துபோன நடிகர் விஜய்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற GOAT பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில், விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்ட மேலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை மிரள வைத்து ஒரு சம்பவம் செய்துள்ளாராம் டாப் ஸ்டார் பிரசாந்த்.


வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இதில், விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். முக்கியமாக 1990களில் கொடிகட்டி பறந்த டாப் ஸ்டார் பிரசாந்த், விஜய்யுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

அதேபோல், விஜய்க்கு வில்லனாக பிரசாந்த் நடிக்கலாம் எனவும் முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், பொங்கல் ஸ்பெஷலாக வெளியான போஸ்டரில் ரசிகர்களே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்ஸை படக்குழு வெளியிட்டது. 'Meet The GOAT squad' என்ற கேப்ஷனுடன் வெளியான இந்தப் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்து மாஸ் காட்டியிருந்தனர். இதனால் GOAT படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நண்பர்களாக நடிப்பது உறுதியாகியுள்ளது. 


இதிலும் எதாவது ஒரு ட்விஸ்ட் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி சமீபத்தில் வெளியான அப்டேட் செம்ம ஹைப் கொடுத்துள்ளது. யுவன் இசையில் செம்ம பார்ட்டி மோட் பாடலாக GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் உருவாகியுள்ளதாம். அதாவது மங்காத்தா படத்தில் அஜித் பட்டையை கிளப்பிய 'ஆடாம ஜெயிச்சோமடா' பாடலை விடவும், GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் தர லோக்கலாக இருக்குமாம். இந்தப் பாடலை அனிருத் பாடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அதைவிட முக்கியமாக இந்தப் பாடலில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் டான்ஸ் ஆடியுள்ளார்களாம். விஜய் ஏற்கனவே பங்கம் செய்துவிடுவார் என்பது பலருக்கும் தெரியும். பிரபுதேவா பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம், அவரே ஒரு நடனப் புயல் தான். அதனால் GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங்கில் விஜய்யும் பிரபுதேவாவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் செம்ம டஃப் கொடுத்து ஆடியுள்ளனர். 


இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரசாந்தும் இணைய, விஜய், பிரபுதேவாவுக்கு இணையாக ஆடி படப்பிடிப்புத் தளத்தையே மொத்தமாக மிரள வைத்துவிட்டாராம். விஜய் சினிமாவில் அறிமுகமான போது உச்சத்தில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். நடிப்பு மட்டுமில்லாமல் டான்ஸ், ஜிம்னாஸ்டிக் என பல வித்தைகளை கற்றுக்கொண்டு தான் சினிமாவில் நடிக்கவே ஆரம்பித்தார். இப்போது சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் டான்ஸ் உட்பட அத்தனை வித்தைகளிலும் தனது திறமையை காட்டி வருகிறாராம். இதனால் GOAT படம் வெளியான பின்னர் பிரசாந்தின் மார்க்கெட் வேல்யூ மீண்டும் உச்சம் தொடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement