• Dec 26 2024

நடிகர் விவேக் மரணதிற்கு கொரோனா ஊசிதான் காரணமா? தீவிர பிரச்சாரத்தில் ஸ்டாலின் மகன்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

வைகை புயல் வடிவேலுவை அடுத்து காமெடி என்றாலே விவேக்தான் எனலாம். தமிழ் சினிமாவில் முன்னணியாக அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக் ஆவார். இவரது நகைச்சுவைகள் அனைத்தும் காமெடியுடன் கலந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை கொண்டதாகவே காணப்படும்.


 எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.இந்த நிலையிலேயே இவரது மரணம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.இந்தியாவில் சமீபத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளமையால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறே தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 


அங்கு அவர் கூறுகையில் " பிரதமர் மோடி கொரோனவை சரியாக கையாளவில்லை , அவரிடம் கொரோனா  தடுப்பூசியையே கேட்டோம் தரவில்லை. மற்றும் மறைந்த நடிகர் விவேக் இறந்த போது நாங்கள் பயந்தோம் , அவர் தடுப்பூசி எடுத்ததாலேயே இறந்தார் என வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அவர் அவ்வாறு இறக்கவில்லை " என தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement