• Dec 25 2024

புதிய லுக்கில் புதிய படத்திற்கு பூஜை போட்ட நடிகர் யாஷ்.. மீண்டும் கேங்ஸ்டராக அவதாரம்..?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தான் நடித்த ஒரே ஒரு படத்தின் மூலம் பான் இந்திய ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் யாஷ். அதாவது பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் முதலாவது பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 2022 ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு சுமார் 1200 கோடி வசூலித்து இருந்தது.

இதனால் நடிகர் யாஷ் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் யாஷ்.

அண்மையில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த படத்தில் கீத்து மோகன் தான் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் யாஷ் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


தான் நடித்த ஒரே ஒரு படத்தின் மூலம் பான் இந்திய ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் யாஷ். அதாவது பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப்

மேலும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பிக்காமலேயே காணப்பட்டது.

இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு இன்றைய தினம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் புது லுக்கில் நடிகர் யாஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளாராம். இது தவிர நயன்தாராவும்  நடிகை கரீனா கபூர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 



Advertisement

Advertisement